தாது மணல் முறைகேடு புகார் 'வி.வி.மினரல்ஸ்' நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

சென்னை, ஏப். 6-
கனிமவள முறைகேடு தொடர்பான புகாரில் சென்னை, திருநெல்வேலியில் 'வி.வி.மினரல்ஸ்' நிறுவன அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள், தாது மணல் எடுத்து விற்பனை செய்தன. அப்போது, தாது மணலை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பதாக, 2012ல் புகார்கள் எழுந்தன.
சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு நடத்திய ஆய்வுக்கு பின், 5,832 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை மற்றும் திருநெல்வேலியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய, 15 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வி.வி.மினரல்ஸ் அலுவலகத்தில் காலை, 9:00 மணி முதல், 10க்கும் மேற்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல், எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே, வி.வி.மினரல்ஸ் தொடர்புடைய மற்றொரு நிறுவனத்திலும், அந்நிறுவன ஆடிட்டர் ஹரி என்பவர் வீட்டிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டு கிராமத்தில் உள்ள வி.வி. மினரல்ஸ் உள்ளிட்ட சகோதர நிறுவனங்களிலும்சோதனைமேற்கொண்டனர்.சோதனை தொடர்வதால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து, சி.பி.ஐ., தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
***
மேலும்
-
வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சதம் அடித்தது வெயில்!
-
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு
-
முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை
-
ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி குற்றவாளி; பெண் போலீஸ் கொலை வழக்கில் தீர்ப்பு
-
அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: மத்திய அரசு ரூ.217 கோடி ஒதுக்கீடு