பராமரிப்பு இல்லாத புத்தளி ஏரி கலங்கல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புத்தளி கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி, 100 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், மழைக்காலத்தில் ஏரி முழு கொள்ளளவை எட்டும்போது, உபரி நீரானது வெளியேற கலங்கல் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, கலங்கல் பகுதி முறையான பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், ஏரி நிரம்பும்போது, தடையின்றி கலங்கல் வழியே, உபரி நீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.

எனவே, ஏரி கலங்கலை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement