முன்னாள் அமைச்சர் மனைவி மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து இல்லை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை:தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ். இவரது மனைவி அஜிதா பென்ஸ்லி; கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார்.
அப்போது, நாகர்கோவிலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்யசிங் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணம் தயாரித்து, சரவணபிரசாத் என்பவருக்கு விற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, நாகர்கோவில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின், இந்த வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜின் மனைவி அஜிதா, மோசஸ், சரவணபிரசாத் உள்ளிட்ட, ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அஜிதா பென்ஸ்லி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும்
-
வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சதம் அடித்தது வெயில்!
-
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு
-
முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை
-
ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி குற்றவாளி; பெண் போலீஸ் கொலை வழக்கில் தீர்ப்பு
-
அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: மத்திய அரசு ரூ.217 கோடி ஒதுக்கீடு