வேர்க்கடலை அறுவடை பணிகள் மும்முரம்

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் வட்டார பகுதிகளில், பாலாறு மற்றும் ஏரி பாசனம் வாயிலாக விவசாயிகள் ஆண்டுதோறும் வேர்க்கடலை சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பருவ மழையை தொடர்ந்து, டிசம்பரில் விவசாயிகள் வேர்கடலை விதை பதிவிட்டர்.

அப்பயிர்கள் தற்போது பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து, அங்கம்பாக்கம், அவளூர், ஆசூர், புளியம்பாக்கம், நாய்க்கன்குப்பம், ஓடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வேர்க்கடலை அறுவடை பணி விறு, விறுப்பாக நடக்கிறது.

இதேபோன்று, திருமுக்கூடல், பினாயூர் ஆகிய கிராமங்களில், பாலாற்று பாசனம் வாயிலாக சாகுபடி செய்திருந்த வேர்கடலையை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வேர்க்கடலை செடிகளில் பூவெடுத்த பருவத்தில் குறைவான பனிப்பொழிவு இருந்ததோடு, மழைப்பொழிவு ஏதும் இல்லாததால், செடிகளில் போதுமான காய் பிடித்து, நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Advertisement