தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆக்ராவில் ஒருவர் கைது

ஆக்ரா: தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தகாத முறையில் தொட்டதாகவும் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து துணை கமிஷனர் சையத் ஆரீப் அஹ்மத் கூறியதாவது:
செக் குடியரசை சேர்ந்த 28 வயதுபெண் ஒருவர், கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தியா வந்துள்ளார். அவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட செல்லும் போது, மதியம் 1 மணி அளவில் ஷம்ஷான் காட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தினார் என்று புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், எங்களது பல்வேறு குழுக்கள் நடத்திய சி.சி.டி.வி கேமரா பதிவில் ஆய்வில் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்பவரை கண்டறிந்தோம்.
எங்களது முழுமையான விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கரண் தான் என்று உறுதியான நிலையில் அவரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு சையத் ஆரீப் அஹ்மத் கூறினார்.










மேலும்
-
காற்றில் கரையும் ஹூரியத் கூட்டமைப்பு:அமித் ஷா வருகை முன்னிட்டு 3 அமைப்புகள் விலகல்
-
ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!
-
தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தில் திருநெல்வேலி முதலிடம்!
-
வக்ப் திருத்தச்சட்டம் இன்று முதல் (ஏப்.,8) அமல்!
-
2029க்கு பிறகும் மோடியே பிரதமராகத் தொடர்வார்: சொல்கிறார் முதல்வர் பட்னவிஸ்
-
மீண்டும் மீண்டும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மதரசா ஆசிரியர்: 187 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு