ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

ஐதராபாத்: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.
பிரீமியர் லீக் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஹெட் (8) முதல் ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா (18), இஷான் கிஷான் (17) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து, நிதிஷ் ரெட்டி (31), கிளாசன் (27) அனிகேத் வர்மா (18) ஆகியோர் சீரான பங்களிப்பை கொடுத்தனர்.
19 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 150 ரன்கள் வருமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், கடைசி ஓவரில் கேப்டன் கம்மின்ஸ் அதிரடி காட்டினார்.அவர் 9 பந்துகளில் 22 ரன்களை குவித்தார். இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.
குஜராத் அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுக்களும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தல 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களில் அவுட்டானார். ரத்தர்போர்டு சிறப்பாக ஆடி 16 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார்.
இறுதியில் குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3 வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேலும்
-
பாதசாரிகள் மீது கார் மோதியதில் 6 பேருக்கு காயம் : டில்லியில் மாணவர்கள் போராட்டம்
-
திரிணமுல் எம்.பி.,க்கள் கோஷ்டிச்சண்டை; கதறி அழுத மஹ்வா மொய்த்ரா!
-
உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய சீனர்கள்; ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்டது அம்பலம்
-
வரி உயர்த்தியது உயர்த்தியதுதான்: அதிபர் டிரம்ப் விடாப்பிடி
-
பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்: சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்கு
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு