புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ ராம நவமி விழா; ஸ்ரீராம சீதா திருக்கல்யாணம் கண்டு பக்தர்கள் பரவசம்


புட்டபர்த்தி; ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி - சீதா தேவி திருக்கல்யாணம் நடந்தது. லட்சுமணர், பக்த ஹனுமன் உடன் காட்சியளித்த ஸ்ரீராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பல யுகங்களுக்கு முன்பு, இறைவன் ஸ்ரீ ராமச்சந்திரனின் அவதாரம் எடுத்து, ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து, அன்னை சீதாவை திருமண செய்தார். அவர் அவதரித்த இந்த புனித நாளில் இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், இன்று பிரசாந்தி நிலையத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை 0800 மணிக்கு விழா தொடங்கியது, தெய்வீக தம்பதியினர், சகோதரர் லட்சுமணன் மற்றும் பக்த ஹனுமான் ஆகியோர் கருவறைக்கு முன்னால் ஒரு மேடையில் எழுந்தருளினர்.


அங்கு வேத மந்திரங்கள் மற்றும் நாதஸ்வரத்தின் பின்னணி இசைக்கு இடையில், சங்கல்பம், ரக்ஷாபந்தனம், யக்ஞோபவீதம், காசி யாத்திரை, கன்னியாதானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டு லஜா ஹோமம் நடத்தப்பட்டு, தெய்வீக தம்பதியினருக்கு பல வகையான இனிப்புகள் மற்றும் சுவையூட்டல்கள் வழங்கப்பட்டன, அதைத் தொடர்ந்து தாம்பூலம் வழங்கப்பட்டது. தெய்வீகத் தம்பதியினருக்கு பூர்ணாஹுதி மற்றும் மங்கள ஆரத்தியுடன் லஜ ஹோமம் முடிந்தது. முழு படைப்பின் நலனுக்காக, தெய்வீகத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
Latest Tamil News

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர். ஏப்ரல் 21, 2002 அன்று புனித ஸ்ரீ ராம நவமி நிகழ்வின் போது நிகழ்த்தப்பட்ட மூல உரையிலிருந்து, பகவானின் தெய்வீக சொற்பொழிவு ஒளிபரப்ப பட்டது. பிரசாந்தி நிலையத்தில் வேத மற்றும் அதனுடன் தொடர்புடைய மந்திர உச்சாடனங்களுடன் கூடிய ஒவ்வொரு அழகையும் விவரிக்கும் தெலுங்கு மற்றும் ஆங்கில வர்ணனைகள் 'ராம ராஜ்ஜியத்தை' மீண்டும் கண் முன் கொண்டு வந்தது. தொடர்ந்து ராம பஜனைகள், பகவானுக்கு மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவடைந்நது.

Advertisement