கருவேல மரங்களை அகற்ற வனத்துறை முன்வருமா?

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் பகுதியில் இருந்து குடிநெல்வாயல் செல்லும் சாலையின் இருபுறமும், 300 ஏக்கர் பரப்பில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடு அமைந்துள்ளது. இந்த காப்பு காட்டில், அதிகளவில் கருவேல மரங்களே உள்ளன. நிழல் மற்றும் பலன் தரும் மரங்கள் ஒன்றிரண்டே இருக்கின்றன.
வனத்துறையின் முறையான கண்காணிப்பு இல்லாமல், காப்பு காடு கருவேல மரங்களால் பொலிவிழந்து கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வனத்துறை மரங்களை வைத்து பராமரிக்காத நிலையில், தானாக வளர்ந்த கருவேல மரங்களே இங்கு அதிகமாக உள்ளன. இவை நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும். வனப்பகுதி அருகில் பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் தண்ணீரை பயன்படுத்தி, பயன்தரும் மரங்களை வளர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ ராம நவமி விழா; ஸ்ரீராம சீதா திருக்கல்யாணம் கண்டு பக்தர்கள் பரவசம்
-
தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆக்ராவில் ஒருவர் கைது
-
170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் ஆனந்த் அம்பானி!
-
ஐதராபாத் அணி பேட்டிங்; குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
-
வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சதம் அடித்தது வெயில்!
-
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு