ரயில்வே கிராசிங்குகளை இணைக்கும் ரோடுகளை சீரமைக்கலாமே; வாகனங்கள் கடந்து செல்வதில் தொடரும் சிரமம்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்குகளில் தண்டவாளங்களை இணைக்கும் ரோடுகள் படுமோசமாக இருப்பதால் வாகனங்களை இயக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.
மாவட்டத்தில் திண்டுக்கல்- மதுரை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, திண்டுக்கல் - திருச்சி, திண்டுக்கல் - கரூர் வழித்தடங்களில் ரயில்வே பாதை செல்கிறது. இந்த பாதைகளில் பல்வேறு இடங்களில் ரோடுகளை கடப்பதற்கு லெவல் கிராசிங்குகள் உள்ளன. தண்டவாளங்களை இணைக்கும் ரயில்வே கேட்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அனைத்து இடங்களும் பெரிய பள்ளங்களாக மாறிவிட்டன. குண்டும் குழியுமாக உள்ள இந்த ரோட்டை கடந்து செல்ல டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சிரமமாக உள்ளது. ரயில்வே கேட் திறக்கும் போது இரண்டு பக்கங்களிலிருந்தும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன.அப்போது பள்ளமான பகுதிகளில் இறங்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக டூவீலர்கள் விபத்தை சந்திக்கின்றன. சேதமடைந்த நிலையில் உள்ள ரோடுகளை கண்டறிந்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
-
5 குழந்தைகள் மீட்பு; போலீஸ் நடவடிக்கை
-
புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் மே 1 முதல் இயக்கம்
-
நீர் மோர் பந்தல் திறப்பு
-
எங்கும் ஒலித்த ஸ்ரீராம நாமம்
-
தேர்வு பணியா; எமிஸ் பணியா ஒரே நேரத்தில் இரண்டா; புலம்பும் தலைமை ஆசிரியர்கள்; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு என்னாச்சு என்று கேள்வி
-
சேவூரில் ஸ்ரீ ராமநவமி விழா