புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் மே 1 முதல் இயக்கம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 86 புதிய வழித்தடங்களில், மே 1 முதல், மினி பஸ் இயக்கம் துவங்குகிறது.
அனைத்து மாவட்டங்களிலும், பஸ் வசதி இல்லாத கிராம, நகர்ப்புற பகுதிகளை கண்டறிந்து, புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, உடுமலை, தாராபுரம் ஆகிய நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.
வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் அளித்த பட்டியல் அடிப்படையில், பஸ்வசதி இல்லாத 86 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து துறையினர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் 14; திருப்பூர் தெற்கு - 33; தாராபுரம் - 17; உடுமலை - 22 என, 86 புதிய மினி பஸ் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு - 32; தாராபுரம் - 8; உடுமலை - 19 என, இதுவரை 59 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 வழித்தடங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்.
தயாராகும் மினி பஸ்கள்
வழித்தட அனுமதி பெறும் மினி பஸ் உரிமையாளர்கள், பஸ்களை தயார்படுத்தி வருகின்றனர்.புதிய பஸ் வாங்கி பதிவு செய்வது; வேறு நபர்களின் பஸ்களை வாங்கி பெயர் மாற்றம் செய்வது போன்ற பணிகள் நடக்கின்றன.
மினி பஸ்களை ஆய்வு செய்தபின், ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில், இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி அளிக்கப்படும்.
வரும் மே 1 முதல், புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து வழித்தடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், கிராமப்புற மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நகர பகுதிகளுக்கு வந்து செல்வதில் உள்ள சிரமங்கள் குறையும்.
900 விண்ணப்பங்கள்
புதிய வழித்தடங்களில் பஸ் இயக்குவதற்காக மினி பஸ் உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வழித்தடம் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. 86 வழித்தடத்துக்காக, 900 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள், வட்டாரபோக்குவரத்து அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, வழித்தடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. ஒரே வழித்தடம் கேட்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது குலுக்கல் நடத்தி, வழித்தடம் ஒதுக்கப்படுகிறது.
மேலும்
-
மே 9ல் வெற்றி நாள் கொண்டாட்டம்; ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு
-
வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு