மும்பை அணியில் பும்ரா

மும்பை: உடற்தகுதியை நிரூபித்த பும்ரா, மும்பை அணியில் இணைந்தார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 31. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டின் (ஜன. 4) போது முதுகுபகுதியில் காயமடைந்த இவர், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,) காயத்தில் இருந்து மீண்டு வரத்தேவையான மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்ட இவர்,
பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணி பங்கேற்ற முதல் 4 போட்டியில் விளையாடவில்லை.

சமீபத்தில் 'பவுலிங்' பயிற்சி மேற்கொண்ட பும்ரா, தனது உடற்தகுதியை நிரூபித்தார். இதனையடுத்து பிரிமியர் லீக் தொடருக்கான மும்பை அணியில் இணைந்தார். இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இவரது வருகையால் மும்பையின் பவுலில் பலமடைந்துள்ளது.

இதுகுறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே கூறுகையில், ''சகவீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்ட பும்ரா, பெங்களூருவுக்கு எதிரான இன்று களமிறங்குவார். முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட ரோகித் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். உடற்தகுதியை பொறுத்து விளையாடுவார்,'' என்றார்.

Advertisement