நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

மோகனுார்: மோகனுார் அடுத்த அரசநத்தம் பஞ்.,க்குட்பட்ட செவந்தாம்பா-ளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன்; இவருக்கு சொந்தமான வீடு, மோகனுார் - நாமக்கல் சாலை, காட்டுரில் உள்ளது.


இங்கு, ஒரு பவுன் செயின், ஒரு பவுன் காயின் என, இரண்டு பவுன் தங்க நகை வைத்திருந்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, வீட்டுக்கு சென்று பார்த்தபோது, நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., கவிப்பிரியா வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Advertisement