ஹோட்டலில் மாமூல் கேட்டு தகராறு * அ.தி.மு.க., வட்ட செயலர் கைது

சென்னை:மாமூல் கேட்டு ஹோட்டல் உரிமையாளரை மிரட்டிய, அ.தி.மு.க., வட்டச் செயலர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 38; விபத்தில் சிக்கி கால் ஊனமுற்றவர். இவர், 10 நாட்களுக்கு முன், ஐஸ்ஹவுஸ் பகுதியில், ஹோட்டல் திறந்துள்ளார்.
இவரது ஹோட்டலுக்கு, ஏப்.,3 இரவு, 7:00 மணிக்கு, அ.தி.மு.க., வட்டச் செயலர் ஐஸ்ஹவுஸ் மூர்த்தி சென்றுள்ளார். அப்துல் ரகுமானிடம், 'நான் இந்த ஏரியா வட்டச்செயலர். என்னிடம் தெரிவிக்காமல் எப்படி நீ ேஹாட்டலை திறக்கலாம்' என, கேட்டுள்ளார்.
'மாமூல் பணத்தை தினமும் தருகிறாயா அல்லது மாத இறுதியில் மொத்தமாக தருகிறாயா' எனக்கேட்டு தகராறு செய்ததுடன், 'என்னை மீறி இந்த இடத்தில் ஹோட்டல் நடத்த முடியாது' எனவும் மிரட்டி உள்ளார்.
அன்று இரவு, 11:30 மணியளவில், ஹோட்டலுக்கு இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு, 'பணம் தர முடியாது; உன்னால் முடிந்தை பார்த்துக்கொள்' என, மிரட்டி உள்ளனர். இருவரும், ஐஸ்ஹவுஸ் மூர்த்தி துாண்டுதலின்படி தகராறு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, அப்துல் ரகுமான், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஹோட்டலில் இருந்த, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஐஸ்ஹவுஸ் மூர்த்தியை, 49, நேற்று கைது செய்தனர்.
கட்சியில் நீக்கம்
இதையடுத்து, ஐஸ்ஹவுஸ் மூர்த்தியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால், அவருடன் கட்சியினர் யாரும் ,எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத போலீசார்
-
ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து வீணாகும் குளம்
-
அரசு பஸ்களில் செல்லும் பயணிகள் அதிருப்தி; காட்சிப் பொருளான முதலுதவி பெட்டி
-
சிந்தனைக்களம்: ஹிந்துக்களுக்கு பா.ஜ., செய்யும் பச்சை துரோகம்
-
புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு
-
ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி