ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து வீணாகும் குளம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் குளம் பாழாகிறது.

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ஊராட்சியில் கடலுார்-பண்ருட்டி சாலையை ஒட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. குளத்தில் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து குளம் முழுதும் பரவியுள்ளது.

இங்கிருந்து 1 கி.மீ., துாரத்தில் வரக்கால்பட்டு ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இதனை பல லட்சம் செலவில் துார்வாரினர். இதனால் கடந்தாண்டு பெய்த மழையில் குளம் நிரம்பி தற்போதைய கோடையிலும் தண்ணீர் நின்று அழகாக காணப்படுகிறது.

தொடர்ந்து குளத்தை துாய்மையாக பராமரிப்பதோடு நடைபயிற்சி செல்ல குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் காராமணிக்குப்பம் குளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காததால் குளம் பாழாகிறது. குளத்தின் கரையில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்க உள்ளது.

அதற்குள் குளத்தை துார்வார வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement