எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியருக்கு ஊதிய குறைப்பை தடுக்க வலியுறுத்தல்
சேலம்: சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பை தடுக்க வலியுறுத்தப்பட்டுள்-ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்க மாநில தலைவர் ஜெயந்தி அறிக்கை:
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்-களில், எச்.ஐ.வி., ஆலோசனை, பரிசோதனை மையங்கள் செயல்-படுகின்றன. அங்கு ஆலோசகர், ஆய்வக நுட்புனர்களாக, 650 பேர் பணிபுரிகின்றனர். 2020ம் ஆண்டு வரை மாநில எய்ட்ஸ் கட்-டுபாட்டு திட்டத்தில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வேண்டும்.
மேலும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பங்கீடு இல்லாமல், தேசிய சுகாதார குழுமம் கொடுக்கும் நிதியில் மட்டும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கினால், தற்போது பெற்று வரும் ஊதியத்தில் இருந்து குறையும் அவலநிலை ஏற்பட்-டுள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, ஊதிய குறைப்பை தடுக்க வேண்டும்.