மண் குவியலால் விபத்து

போடி : போடி காமராஜ் பஜார் மெயின் ரோடு, தேவாரம் செல்லும் மெயின் ரோட்டின் இருபுறமும் மண் குவியல் தேங்கி உள்ளது.

இதனால் காற்று காலங்களில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்லும் போது வெளியேறும் மண் தூசுகளால் பின் பக்கமாக டூவீலரில் வருபவர்களின் கண்களில் விழுகிறது.

இதனால் அடிக்கடி வாகன விபத்தில் சிக்கி காயம் அடைவதோடு, உயிர் பலியாகும் நிலை ஏற்படுகிறது. வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரோட்டின் இருபுறமும் தேங்கி உள்ள மண் குவியல்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement