வெங்கடம்பட்டியில் ராமநவமி விழா

தர்மபுரி,: தர்மபுரி அடுத்த, வெங்கடம்பட்டியில் ராமநவமியை முன்-னிட்டு, பட்டாபிராமர் சீதாதேவி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
இதில், பல்லக்கில் ராமர் சீதாதேவி திருவீதி உலா நடந்தது. நேற்று காலை பட்டாபிராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு பூஜை, ஹோமங்கள் நடந்தன. இதில், ராமர் கீர்த்தனைகள் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்-டது. மதியம், 1:30 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து, பட்டாபி ராமர்- சீதா தேவிக்கு வேத மந்திரங்கள் ஓத திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு, பட்டாபிராமர், -சீதாதேவி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. ஏற்பாடு-களை ஊர் தலைவர்கள் ராமசாமி, ராமலிங்கம், சிவக்குமார் மற்றும் அறங்காவலர் குணசேகரன் உட்பட பொதுமக்கள் செய்தி-ருந்தனர்.

Advertisement