பா.ம.க., பொதுக் குழு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் அம்மாபாளையம் பச்சையம்மன் கோவில் வளாகத்தில், ஒன்றிய செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் நாகேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ராமலிங்கம், வன்னியர் சங்க மாவட்ட செயலர் சேட்டு ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
பசுமை தாயக மாவட்ட தலைவர் அருள் வரவேற்றார். கூட்-டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாநாடு பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் பேசினர். வரும் மே, 11ல் மகாபலிபுரத்தில் நடக்கும் சித்திரை முழுநிலவு மாநாடுக்கு, 200 வாகனங்களில், 50 ஆயிரம் பேர் செல்வது எனவும், அதற்கான பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதே போன்று பாப்பிரெட்-டிப்பட்டி கிழக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் இருளப்பட்-டியில் ஒன்றிய செயலர் மணி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் சத்யராஜ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement