பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ரேஷன் வினியோகம் பாதிப்பு

தேனி : ரேஷன்கடை பணியாளர்கள் விடுமுறை எடுத்து கடைகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது.

தேனி கலெக்டர் அலுவலகம் முன் ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில், 'நுகர்பொருள் வாணிபகழக குடோன்களில் இருந்து சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும், , தனித்துறை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விடுமுறை எடுத்து, கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு தலைவர்கள் பன்னீர்செல்வம், அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் அய்யனார், காமாட்சி முருகேசன், பாண்டி, குருசாமி, ஆர்த்தி, சிவகாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டத்தில் 403 முழுநேர ரேஷன்கடைகள் உள்ளன.

இதில் ஊழியர்கள் போராட்டத்தால் 203 கடைகள் நேற்று செயல்படவில்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது.

Advertisement