நாளை மதுக்கடை மூட கலெக்டர் உத்தரவு

திருப்பூர்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 10ம் தேதி, மதுக்கடைகள், மன மகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மூடப்படும் என, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார். விதியை மீறி மது விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இறைச்சி விற்க தடை



திருப்பூர் மாநகர் நல அலுவலர் முருகானந்த் அறிக்கை:

நாளை (10ம் தேதி), மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அன்றைய தினம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி உள்ளிட்டவை வதை செய்வதும், அவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்வதும் தடை செய்யப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் இயங்கும் இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனை தடை செய்யப்பட வேண்டும். மாநகராட்சி ஆடு வதை கூடமும் அன்று இயங்காது. இதனை மீறுவோர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement