ரோட்டில் பதிந்த தேர் சக்கரம்; பொக்லைன் வைத்து மீட்பு

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று காலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மாலை தேரோட்டம் நடைபெற்றது.

பெரிய தேரான அம்மன் தேர், ஈஸ்வரன் கோவில் முன் இருந்து பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் அருகில் சென்றபோது, அம்மன் தேரின் சக்கரம் ரோட்டில் பதிந்து சிக்கி கொண்டது.

அதன்பின், பொக்லைன் வரவழைக்கப்பட்டு, ஒன்றரை மணி நேரத்துக்கு பின் தேர் மீண்டும் நகர்ந்து நிலை சேர்ந்தது. ஈஸ்வரன் கோவில் வீதியில், தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன் தான் ரோடு போடப்பட்டது.

குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் தரமின்றி ரோடு போடப்பட்டதால், அந்த இடத்தில் தேர் சக்கரம் பதிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement