2 தொழிலாளரின் உயிரை 'குடித்த' மது

அவிநாசி; அவிநாசி, பழங்கரை ஊராட்சி, இந்திரா காலனியை சேர்ந்தரங்கன் மகன் செந்தில்குமார், 45. இவர் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, அதிக மது அருந்தினார்.

வீட்டில் நள்ளிரவில் திடீரென வாந்தி எடுத்ததால் அவரின் மனைவி, அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் செந்தில்குமார் உயிரிழந்தார்.

l அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம், 64. விசைத்தறி தொழிலாளி. அவரது வீட்டின் மாடியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். நிலை தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.

அருகில் வசிப்பவர்கள், அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார். அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement