பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரியில் காங்., கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க, நேற்று தமிழகம் வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரி மாவட்ட காங்., சார்பில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், கருப்பு கொடி ஏந்தி கண்-டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொறுப்பாளர் தீர்த்-தராமன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வடிவேல் வரவேற்றார்.
தமிழக விரோத போக்கை கடைபிடிக்கும் பிரதமருக்கு கண்-டனம் தெரிவிக்கும் வகையில், காங்., கட்சியினர் ஆர்ப்பாட்-டத்தின் போது, கருப்பு கொடி ஏந்தி கோஷம் எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement