குட்கா விற்ற 2 பேர் கைது

கிள்ளை : குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கிள்ளை அடுத்த கீழ் அனுவம்பட்டு சாலைக்கரையில் குட்கா விற்பதாக வந்த தகவலின்பேரில் அப்பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் சோதனை நடத்திரன்.

அதில், குட்கா விற்ற சூர்யா,23; இருதயராஜ்,37; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, தலா 4 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement