புகைப்பட கண்காட்சி

கள்ளக்குறிச்சி : தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, விளம்பார் ஊராட்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், புகைப்பட தொகுப்புகள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்களும் வைக்கப்பட்டன.
இந்த தொகுப்பினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement