தமிழ் பாடத்தில் மூன்று மாணவியர் சிறப்பு

பெங்களூரு : பி.யு.சி., தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே கல்லுாரியைச் சேர்ந்த மூன்று மாணவியர் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் பி.யு.சி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, தேர்வு எழுதிய 276 மாணவர்களும் வெற்றி பெற்று அசத்தினர்.

கோலார் மாலுார் கிறைஸ்ட் கல்லுாரி மாணவி ரெபகா, தமிழில் 98 மதிப்பெண்கள்; இந்து 95; தர்ஷினி 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும் சிலர் 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement