கலெக்டர் வங்கி கணக்கில் மோசடி * மேலும் இருவர் கைது

பாரிமுனை:அரசின் சார்பில் துவக்கப்பட்ட, கலெக்டரின் வங்கிக் கணக்கில் இருந்து, 11.63 லட்சம் ரூபாயை எடுத்து மோசடி செய்த வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், அங்கு பணியின்போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பெயரில், என்.ஆர்.ஐ., வங்கி கணக்கு, அரசின் சார்பில் துவக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அந்த வகையில், சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் சார்பில், சென்னை கலெக்டர் பெயரிலான, என்.ஆர்.ஐ., நிதியுதவி வங்கி கணக்கில் இருந்து, 11.63 லட்சம் ரூபாயை முறைகேடாக எடுக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக, துணை ஆட்சியர் ஹர்ஷத்பேகம், வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வருவாய் ஆய்வாளர்களான, திருவள்ளூர், பாக்கம் புது காலனியை பிரமோத், 30; திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியை, 31கலெக்டரின் கையெழுத்தை போலியாக போட்டும், போலி ரப்பர் ஸ்டாம் பயன்படுத்தியும் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பிரமோத்தின் நண்பரான, திருவள்ளூரை சேர்ந்த தினேஷ், 30, உடந்தையாக இருந்தது தெரிந்தது. மூவரையும் போலீசார், கடந்த 4ம் தேதி கைது செய்தனர்.ர்

இந்நிலையில், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ரகுபதி, 30; ராமாபுரம், அம்மாள் நகரை சேர்ந்த கார்த்திக்குமார், 31 ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்..

Advertisement