அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்ததால் சோகம்
அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான எண்ணமங்கலம், மூலக்கடை, ராமகவுண்டன்கொட்டகை, முத்தரசன்குட்டை உள்-ளிட்ட இடங்களில், நேற்று மாலை, 5:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆர்.ஜி.கே.புதுாரை சேர்ந்த ராசு தோட்டத்தில், கதளி ரக வாழை, 500 மரங்கள், வட்டக்காடு நிர்-மல்குமார் தோட்டத்தில், 100 செவ்வாழை மரம், அதே பகு-தியில் குமார் தோட்டத்தில், 400 செவ்வாழை மரம், முத்தரசன்-குட்டையில் தேவராஜ் வாழை தோட்டத்தில், 100 கதளி ரக மரங்-களும் முறிந்தன.
* பர்கூர் மலைப் பகுதியில் தாமரைக்கரை, ஈரட்டி, தேவர்மலை, பர்கூர், ஓசூர், தட்டகரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 4:௦௦ மணி முதல், 5:௦௦ மணி வரை ஒரு மணி நேரம் பலத்த காற்-றுடன் கனமழை பெய்தது.
இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளான சங்கராப்பா-ளையம், எண்ணமங்கலம், மைக்கேல்பாளையம், பச்சாம்பா-ளையம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக துாறல் மழை பெய்தது.
காற்றால் முறிந்த மின் கம்பம்
கடம்பூர்மலையில் நேற்று மதியம் முதல் மாலை வரை இடை-வெளி விட்டு மழை பெய்தபடியே இருந்தது. அணைக்கரை மற்றும் மாக்கம்பாளையம் வழியில் அணைக்காடு பகுதியில் சூறாவளி காற்றால், ௪ மின் கம்பங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. ஏற்கனவே கடம்பூர் மலை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
சேற்றில் சிக்கிய மினி பஸ்
பர்கூர்மலையின் கிழக்கு மற்றும் மேற்கு மலையில் நேற்று முன்-தினம் கனமழை பெய்தது. இதில் ஒசூர், கொங்காடை, செங்கு-ளத்தில் பலத்த மழை பெய்தது.
இதனால் ஒசூர் அருகே உள்ள மண் ரோடு சேறு, சகதியானது. அப்போது அவ்வழியே கொங்காடை சென்ற அரசு மினி பஸ் சேற்றில் சிக்கியது. அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்-டது.
* நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிளான குருமந்துார், எலத்துார், மூணாம்பள்ளி, சூரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை, 5:00 மணிக்கு தொடங்கிய மழை, 6:00 மணி வரை கனமழையாக கொட்டி தீர்த்தது.
அப்போது பலத்த காற்றும் வீசியது. பலத்த காற்றால் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஐந்து மரங்களும், நம்-பியூர், சூரிபாளையம் பகுதியில் பல்வேறு
இடங்களில் வேருடனும் மரங்கள் சாய்ந்தன
நிருபர் குழு.
மேலும்
-
சாலையோரம் துாங்கும் லாரி டிரைவர்கள் போலீஸ் எச்சரித்தும் அலட்சியம்
-
கடலுார் சிப்காட்டில் காற்று, நீர் மாசுபாடு... அதிகரிப்பு; நோய் பரவலை தடுக்க நடவடிக்கை தேவை
-
தகுதியான தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.பி., ஆபீசில் நியமிக்கப்படுவாரா?
-
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
-
சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
-
ஆதார் மையத்தில் காத்திருந்து ராமநாதபுரம் மக்கள் அவதி