வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

விருத்தாசலம், : புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில், வேளாண் மாணவிகள் உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், விருத்தாசலம் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில், வேளாண் மாணவிகள் சார்பில், உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், உலக சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். வேளாண் மாணவிகள் அபிநயா, அல்பியா, அனிதா, ஆர்த்தி, அருணாதேவி, அஸ்வினி, தனுஷ்யா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement