கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை

மூணாறு: கேரளாவில், இம்மாதம் துவக்கம் முதல் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 11 வரை சில பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, மலப்புரம், வயநாடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும். மணிக்கு 30 கி.மீ., முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement