பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கோரிக்கை

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கராபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டீக்கடை, ஓட்டல், மளிகை, பூக்கடை உள்ளிட்டவைகளில், பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கொண்டே, பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

துணிப்பைகளை தவிர்த்து, பிளாஸ்டிக் கேரி பேக்குகளிலேயே, பொருட்களை வாங்கி செல்லும் வழக்கம் பொதுமக்களிடமும் அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொள்வது கிடையாது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாட்டால், மண் வளம் முற்றிலும் கெடும். நிலத்தடி நீர் மட்டம் குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement