கள்ளக்குறிச்சியில் வி.சி., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வக்ப் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வி.சி., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மதியழகன், அறிவுக்கரசு, பழனியம்மாள் தலைமை தாங்கினர். நகர செயலாளர் இடிமுரசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் சங்கதமிழன், மலையரசன் எம்.பி., கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் பா.ஜ., அரசிற்கு கண்டனம் தெரிவித்தனர். இதில் மண்டல செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் பொன்னிவளவன், மது மற்றும் போதை ஒழிப்பு மாநில செயலாளர் சக்திகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement