பைக் நிறுத்துவதை தடுக்க கயிறு கட்டி தடுப்பு அமைப்பு

தாம்பரம்:தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
அங்கு, தாம்பரத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வருவோர், தங்களுடைய கார், இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி செல்கின்றனர். அந்த வகையில், பல மீட்டர் துாரத்திற்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அச்சாலையில் நாள்தோறும் நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து, சில வாரங்களுக்கு முன், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார், அணுகு சாலையில் கயிறு கட்டி, வரிசையாக இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
அதையும் மீறி வாகனங்களை நிறுத்தினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement