அண்ணாமலைக்கு ஆதரவாக தஞ்சையில் பா.ஜ.,வினர் போஸ்டர்

2

தஞ்சாவூர்: 'தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை நீடிக்க வலியுறுத்தி, 1,000க்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' என, தஞ்சை பா.ஜ.,வினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், மாநில இணைஞரணி செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் ஆகியோர், தஞ்சாவூர் பா.ஜ., தெற்கு மாவட்டம் சார்பில் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில், 'இந்தியாவுக்கு மோடி; தமிழகத்திற்கு அண்ணாமலை வேண்டும்.

அ.தி.மு.க., கூட்டணி வேண்டாம். தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை நீடிக்க வலியுறுத்தி, 1,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்' என, அதில் இடம் பெற்று உள்ளது.

இந்த போஸ்டர், அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement