ஊராட்சி பள்ளி ஆண்டு விழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

புதுப்பாளையம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், தர்மலிங்கம், சீனுவாசன், ஆசிரியர் பயிற்றுநர் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் வட்டார கல்வி அலுவலர்கள் செல்வம், கமலாதேவி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

ஆசிரியர் முருகவேல் நன்றி கூறினார்.

Advertisement