கோடையை குளிர்விக்க தயாராகும் மண்பானைகள்

பேரையூர்: இயற்கை முறையில் கோடையை சமாளிக்க மண்பானைகளின் தேவை இந்தாண்டு அதிகரிக்க கூடும் என்பதால் பேரையூர் அருகே சிலமலைபட்டியில் மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயற்கை முறையில் குளிர்விக்கப்படும் தண்ணீரை பருகுவது என பலர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மண்பானைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக பொங்கல் பானைகள் தயாரிக்கும் போது கோடைக்கு தேவையான மண்பானைகளை தயாரிப்பது என தொழிலாளர்கள் வழக்கமாகக் வைத்திருந்தனர். தற்போது பானைகளின் தேவை அதிகரிக்கும் சூழல் நிலவுவதால் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ''இங்கு தயாராகும் மண் பானைகளை சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பானை ஒன்று ரூ.200 விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். தற்போது பானை அதிக அளவில் விற்பனை ஆகிறது. கோடை ஆரம்பித்துள்ளதால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

Advertisement