லாரி உரிமையாளர்கள் எஸ்.பி.,க்கு பாராட்டு

கடலுார் : கடலுார் அருகே வழிபறியில் ஈடுபட்ட ரவுடியை என்கவுண்டர் செய்த எஸ்.பி.,க்கு மாவட்ட கனரக லாரி உரிமையாளர்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கடந்த 2ம் தேதி 3 இடங்களில் லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக பிடிக்க எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசாரின் தீவிர வேட்டையில் 6 பேர் சிக்கினர்.இச்சம்பவத்திற்கு தலைவனாக செயல்பட்ட விஜய் (எ) மொட்டை விஜய்,19; என்கவுன்டர் செய்யப்பட்டார். என்கவுன்டர் சம்பவம் எதிர்காலத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

இதற்காக எஸ்.பி., ஜெயக்குமாரை, மாவட்ட கனகர லாரி உரிமையாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் இளஞ்சூரியன், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் மகேஷ் ஆகியோர் சந்தித்து பாராட்டினர்.

Advertisement