24 மணி நேர சேவையில் ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை

கோவை, தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை பல்துறை சிறப்பு மருத்துவமனையாக உள்நோயாளிகள், வெளிநோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த மருத்துவமனையில், பரிசோதனைக்கூடம், எக்ஸ் ரே, இ.சி.ஜி., மருந்தகம், ஆம்புலன்ஸ் மற்றும் இயல் நிலை மருத்துவக் கூடம் அனைத்தும், 24 மணி நேரமும் செயல்படுவது கூடுதல் சிறப்பாகும்.

குழந்தை மருத்துவம், மகளிர் மருத்துவம், எலும்பு மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிறப்பு சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகளுக்கும் நகரின் சிறப்பு மருத்துவர்கள் மூலம் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இரவு, பகல் என 24 மணி நேரமும், ஓய்வின்றி நோயாளிகளை கண்காணித்து, தரமான சிகிச்சை அளிக்கிற செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.இங்கு, நிபந்தனைகளுக்குட்பட்டு அனைத்து மருத்துவ காப்பீட்டுக்கும் மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மகேந்திரன், இருதயம், தைராய்டு, சர்க்கரை மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பு சிகிச்சை அளிக்கிறார். இவரது மனைவி, டாக்டர் ஜெயபிரியா, மகப்பேறு மற்றும் மகளிர் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறார்.

Advertisement