அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கோவை; கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கலெக்டர் அறிக்கை:
கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் 18 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள, 13 அங்கன்வாடி பணியாளர்கள்,
23 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 101 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேர்முகத்தேர்வின் மூலம் இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரத்தை குறிப்பிட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதோடு பள்ளி மாற்றுசான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றிதழ், ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களோடு பங்கேற்க வேண்டும்.
விண்ணப்பங்களை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வழியாக வரும் 23 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.
இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் கூறியுள்ளார்.
மேலும்
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி