வாடிக்கையாளர் சேவை மாதம் கருத்து தெரிவிக்க அழைப்பு

கோவை; வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், வரும் 30ம் தேதி வரை, 'வாடிக்கையாளர் சேவை மாதம்' துவக்கியுள்ளது. இது, சேவை தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது, நெட்வொர்க் தரத்தை மேம்படுத்துவது மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

வாடிக்கையாளர் சேவை மாதத்தின் முக்கிய செயல்பாடுகளில், வாடிக்கையாளர் சேவை மையங்களில் குறை தீர்க்கும் முகாம்கள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புகார்களைத் தீர்ப்பதற்கான சிறப்பு கள இயக்கங்கள், முன்கூட்டியே சேவை கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பிரசாரங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த முயற்சி, பி.எஸ்.என்.எல்.,ன் வாடிக்கையாளர் திருப்திக்கான உறுதிப்பாடு, சேவை நம்பகத்தன்மை, விரைவான பைபர் இணைப்புகள் வழங்கல் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்கள் கருத்துகள், பரிந்துரைகள், பிரச்னைகள் அல்லது சேவை, கோரிக்கைகளைபோன்றவற்றை https://cfp.bsnl.co.in/ என்ற இணையதளம் வாயிலாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என, அழைப்பு விடப்பட்டுள்ளது.

Advertisement