மகளிர் மருத்துவ பிராச்சிதெரபியின் தேசிய அளவிலான பயிலரங்கு

கோவை; ஜி.கே.என்.எம்., மருத்துவமனை மற்றும் இந்திய பிராச்சிதெரபி சங்கம் இணைந்து, மகளிர் மருத்துவ சிகிச்சைக்கான பிராச்சிதெரபி முறைகள் குறித்த இரண்டு நாள் தேசிய அளவிலான பயிலரங்கினை நடத்தியது.

மருத்துவ கோட்பாடுகள் மற்றும் நடைமுறை செயல்பாடுகள் உள்ளிட்ட இரண்டு அம்சங்களை உள்ளடக்கிய பயிலரங்கில், சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அதிநவீன சிகிச்சைமுறைகள் குறித்து கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவ மாணவர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

பிராச்சிதெரபி சிகிச்சை மூலமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக துல்லியமான அளவில் சுதர்வீச்சின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஜி.கே.என்.எம்., மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி, புற்றுநோய் துறை தலைவர் சிவனேசன், தலைமை கதிரியக்க புற்றுநோய் மருத்துவர் கார்த்திகா, கதிரியக்க புற்றுநோய் மருத்துவர் ஸ்ரீனிவாசன, சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர் தயாளன் குப்புசாமி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement