பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பண; புறக்கணிப்பு; சுணக்கம் ஏற்படும் அவலம்; நடவடிக்கை கோரும் ஆசிரியர்கள்
கோவை; பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளதால் மதிப்பீடு பணிகளில் சுணக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் பிளஸ்1 பொதுத்தேர்வு முடிந்து தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்துவருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இரு வகுப்புகளிலும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர்.
தொடர்ந்து, கடந்த, 4 முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்துவருகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நகராட்சி பெண்கள் பள்ளியிலும், கோவை கல்வி மாவட்டத்தில் சர்வஜன, அவிலா பள்ளிகளிலும் விடைத்தாள் மதிப்பீடு முகாம் நடக்கிறது.
இம்மூன்று மையங்களிலும், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் திருத்துகின்றனர். இந்நிலையில், தங்களது நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து, தொலைதுாரத்தில் பணியமர்த்தி அலைக்கழிப்பதாக ஆசிரியர்கள் குமுறிவருகின்றனர்.
உரிமைகள் மறுப்பு!
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக வருவாய் மாவட்ட தலைவர் முகமது காஜா முகைதீன் கூறியதாவது:
அரசு தேர்வுகள் இணை இயக்குனர் வழிகாட்டுதலின்படி, வருவாய் மாவட்டத்தில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பும் மதிப்பீட்டு முகாமில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கைவிடுத்தும் எந்த பலனும் இல்லை.
மேலும், பணிபுரிய விரும்பிய முகாமில் காத்திருந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்து மதிப்பீடு பணி நடக்கிறது. குறிப்பாக, பொள்ளாச்சி கல்வி மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யக்கூடாது என கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி முதல்வருக்கு கடிதம் அனுப்பிள்ளோம். இதனால், நாளை (இன்று) முதல் விடைத்தாள் திருத்தும் பணியை, 200 ஆசிரியர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னுரிமை அடிப்படையில்!
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில்,''பொள்ளாச்சி, கோவை கல்வி மாவட்ட மையங்களில் பணிபுரிய விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் அவர்கள் விரும்பிய ஒரே இடத்தில் நியமித்தால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைந்துவிடுவர். மற்ற முகாம்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிகமாக இருப்பர். எனவே, முன்னுரிமை அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புறக்கணிப்பு போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணியில் சுணக்கம் ஏற்படாது,'' என்றார்.
மேலும்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்