கற்றல் என்பது வாழ்நாள் பயணம்

கோவை; ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரியின் 13வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி தலைமை வகித்தார்.
சென்னை, ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸின் தொழில் துறையின் தலைமை ஆலோசகர் மற்றும் உதவி துணைத் தலைவர் கிருஷ்ணா பாலகுருநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்குபட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
பல்கலை தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற, 20 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும், வழங்கினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார், 550 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
தொடர்ந்து அவர் பேசுகையில், '' வேகமாக மாறிவரும் உலகில் மாணவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். கற்றல் என்பது வாழ்நாள் பயணம்.
''பட்டப்படிப்புடன் முடிவடைவதில்லை, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்,'' என்றார்.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலாளர் பிரியா, கல்லுாரியின் முதல்வர் நடராஜன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி