மே 9ல் வெற்றி நாள் கொண்டாட்டம்; ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு

4


புதுடில்லி: மே 9ம் தேதி நடக்க உள்ள ரஷ்ய வெற்றிநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.



சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனியின் நாஜி படைகள் இடையே கடந்த 1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை இடையே போர் நடைபெற்றது. இந்த போரில் எவ்வித நிபந்தனையும் இன்றி நாஜி படைகள் சோவித் யூனியனிடம் சரண் அடைந்தன.

அந்த வெற்றியின் 80ம் ஆண்டு தினத்தை மே 9ம் தேதி,தலைநகர் மாஸ்கோவில் கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் வெற்றிநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதை ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ உறுதிப்படுத்தி உள்ளார்.



பிரதமர் மோடி கடைசியாக ஜூலை 2024ல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்தார். அந்த பயணத்தின் போது அவர் ரஷ்ய அதிபர் புடினை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டாலும், அவரின் இந்திய வருகைக்கான தேதிகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement