உலர்களம் அமைக்க கோரிக்கை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே, மக்காச்சோள உலர்களம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு வழியாக பாலப்பட்டு, தும்பை, பழைய பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, மோட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களுக்கு தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

தற்போது அரசம்பட்டு கிராமத்தில் அதிக அளவில் மக்காசோளத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அங்கு போதிய உலர்களம் இல்லாததால், அறுவடை செய்த மக்காச்சோளத்தை, நெடுஞ்சாலையில் உலர வைக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அங்கு உலர் களம் அமைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement