பெருமாநல்லுார் கோவிலில் நாளை குண்டம் திருவிழா

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நாளை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை (8ம் தேதி) அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். அன்று மாலை தேரோட்டம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் குவிவர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதற்காக, கூடுதல் எஸ்.பி.,க்கள் இருவர் தலைமையில், மூன்று டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 எஸ்.ஐ.,கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை போலீசார், 200 ஊர் காவல் படையினர், 50 டிராபிக் வார்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் மற்றும் நான்கு இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களுக்கு வச தி
பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 60 இடங்களில் மொபைல் டாய்லெட், ஒன்பது இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் குண்டம் இறங்குவதை பார்க்க இரண்டு இடங்களில் எல்.இ.டி., திரை, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு, குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றும், நாளையும்
போக்குவரத்து மாற்றம்
குண்டம் திருவிழாவையொட்டி, பெருமாநல்லுாரில், இன்று (7ம் தேதி) மதியம் முதல் 8ம் தேதி இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோபி மற்றும் ஈரோட்டில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள் விவசாயிகள் நினைவு ஸ்துாபியில் இருந்து, நெருப்பெரிச்சல், பூலுவபட்டி வழியாக திருப்பூர் செல்ல வேண்டும். திருப்பூரில் இருந்து, கோபி, ஈரோடு செல்லும் வாகனங்கள் பூலுவபட்டி, நெருப்பெரிச்சல், கணக்கம்பாளையம் வழியாக விவசாய ஸ்துாபி சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.
ஈரோட்டில் இருந்து கோவை செல்லும் பஸ்கள், விவசாய ஸ்துாபி அருகே பயணிகளை இறக்கி விட்டு தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். அதுபோல், கோவையில் இருந்து ஈரோடு, சேலம் செல்லும் பஸ்கள் ஈட்டி வீரம்பாளையம் பாலத்தில் பயணிகளை இறக்கி விட்டு நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.
பைக் மற்றும் வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நான்கு ரோடு பகுதிகளிலும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்
-
வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்