இளைஞர் மாநாடு பி.எம்.எஸ்., தீர்மானம்

திருப்பூர்; பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், அனுப்பர்பாளையத்தில் நேற்று ஆலோசனைக்கூட்டம், மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடந்தது.

கட்டுமான சங்கம் சார்பில், சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் பிரபு, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

பனியன் சங்க செயலாளர் விக்னேஷ் பிரபு, மாவட்ட துணை தலைவர் சுரேஷ், கட்டுமான சங்க நிர்வாகி தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும், 13ம் தேதி, 15 வேலம்பாளையம் - சோழிபாளையம் ரோடு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகே, பி.எம்.எஸ்., இளைஞர் மாநாடு நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.

மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மாநில செயலாளர் சதீஷ் உள்ளிட்டோரை அழைத்து, இளைஞர் மாநாட்டை சிறப்பாக நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.

Advertisement