பூட்டிய வீட்டிற்குள் இருந்து புகை வந்ததால் பரபரப்பு

பாகூர்; பாகூரில் பூட்டிய வீட்டிற்குள் இருந்து புகை வந்ததால் பரபரப்பு நிலவியது.
பாகூர், புதிய காமராஜர் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பத்மா, 50.இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று மதியம் காஸ் அடுப்பில் சமையல் செய்தார். பின், அவசர வேலையாக புறப்பட்ட அவர், காஸ் அடுப்பை நிறுத்தாமல் கவனக்குறைவாக வீட்டை பூட்டிச் சென்றார்.
சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து ஜன்னல் வழியாக புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்பாகூர் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் ஏட்டு சக்திவேல்,கான்ஸ்டபிள் சங்கீதராஜ் மற்றும் போலீசார் முதலில் மின் இணைப்பை துண்டித்து விட்டு,கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது,காஸ் அடுப்பில் இருந்த சமையல் பாத்திரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
காஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் ஆப் செய்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்தனர். போலீசார்விரைந்து செயல்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும்
-
ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்சிடம் இருந்து வாங்கும் இந்தியா
-
கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
-
2 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு செந்தில்பாலாஜி சகோதரர் ஆஜர்; நீதிமன்றம் உத்தரவு
-
மே 9ல் வெற்றி நாள் கொண்டாட்டம்; ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு
-
வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்