தேசிய கடல்சார் தினம் கொண்டாட்டம்

காரைக்கால்,; காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.
கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் தலைமை தாங்கினார். துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி சச்சின் ஸ்ரீவஸ்தவா முன்னிலை வகித்தார். இதில் கடல்சார் துறையின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரிகளின் உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
தற்போதுள்ள துறைமுக வசதிகள், வர்த்தகத்தை மேம்படுத்துதல், புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்தல் புதிய சரக்கு மற்றும் கொள்கலன் வணிகம், வணிகத்தை எளிதாக்குவதற்கான அரசாங்க முயற்சிகள், டிஜிட்டல் மயமாக்கலில் முன்னேற்றங்கள் மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில் துறைமுக அடிப்படையிலான தொழில்களின் வளர்ச்சி ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஐ.சி.ஜி.எஸ்., நிலையத் தளபதி சவும்யா சந்தோலா மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), லகு உத்யோக் சக்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்சிடம் இருந்து வாங்கும் இந்தியா
-
கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
-
2 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு செந்தில்பாலாஜி சகோதரர் ஆஜர்; நீதிமன்றம் உத்தரவு
-
மே 9ல் வெற்றி நாள் கொண்டாட்டம்; ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு
-
வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்