திருநங்கைகளுக்கு பயிற்சி முகாம்
மதுரை: மதுரை சமூக அறிவியல் கல்லுாரியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக செயல்திட்டப்படி திருநங்கைகளுக்கான 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
துவக்க விழாவில் கல்லுாரி செயலாளர் தர்மாசிங் தலைமை வகித்தார். மாவட்ட குடும்பநல நீதிபதி அனுராதா பங்கேற்றார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சமுதாய வளர்ச்சி அலுவலர் பூமிகா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூத்த வழக்கறிஞர் முத்துக்குமார், திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் பிரியாபாபு முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகளை நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் குரு வழங்கினார்.
நீதிபதி அனுராதா பேசுகையில், ''தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு திருநங்கைகளின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தது. இதில் 2014ல் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. திருநங்கைகள் முன்னேறுவதற்கான அடையாளமாக அவர்களை தனிமனிதரும், சமூகமும் அங்கீகரிக்க வேண்டும்,'' என்றார். டாக்டர் பிரசாந்த் நன்றி கூறினார்.
மேலும்
-
ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்சிடம் இருந்து வாங்கும் இந்தியா
-
கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
-
2 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு செந்தில்பாலாஜி சகோதரர் ஆஜர்; நீதிமன்றம் உத்தரவு
-
மே 9ல் வெற்றி நாள் கொண்டாட்டம்; ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு
-
வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்